2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
உலகக்கோப்பை முதல் போட்டியில் ஸ்டெயின் விலகல்! - Dale steyn
லண்டன்: உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் அதிரடியான பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ பந்துவீச்சாளர் விளையாடாததால், அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை என்றாலே தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ஷ்டம் இருக்காது என்ற பேச்சு இருக்கும் நிலையில், தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஸ்டெயின் காயத்திலிருந்து குணமடையாததது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு அணிக்காக களமிறங்கிய ஸ்டெயின் தொடரின் பாதியிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது.