தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இன்றையப் போட்டியில் ரபாடாவுடனான பிரச்னையைத் தீர்த்துக்கொள்கிறேன்!

லண்டன்: 'எனக்கும் ரபாடாவுக்கும் இடையேயான பிரச்னையை போட்டியில் தீர்த்துக்கொள்கிறேன்' என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

By

Published : Jun 5, 2019, 2:29 PM IST

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா சில நாட்களுக்கு முன்னதாக இந்திய கேப்டன் கோலியை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். அவர், என் பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு எங்களை ஏதாவது வார்த்தைக் கூறிவிட்டு செல்வார். அதேபோல் நாங்கள் நடந்துகொண்டால் கோலி ஆத்திரமடைவார். நான் விளையாடியதிலேயே மிகவும் முதிர்ச்சியில்லாத வீரர் என்றால் அது விராட்தான் என கோலி குறித்து ரபாடா பேசினார்.

இந்நிலையில், உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடுகிறது. இதற்காக நேற்று செய்தியாளர்கள் ரபாடாவின் கருத்துக் குறித்து கேட்கையில், நாங்கள் இருவரும் எதிரணிகளாய் பலமுறை ஆடியுள்ளோம். அவருடன் ஏதாவது பேசுவதற்கு இருந்தால் நேரடியாக பேசித் தீர்த்துகொள்கிறேன் என சீற்றத்துடன் தெரிவித்தார்.

மேலும், தென்னாப்பிரிக்கா அணியை நாங்கள் எப்போதும் குறைத்து மதிப்பிடவில்லை. மிகவும் அபாயகரமான அணியாகத்தான் பார்க்கிறோம். முதன்முறையாக உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது எனப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details