2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி டாஸ் போடாத நிலையிலேயே மழையால் கைவிடப்பட்டது.
மழையால் கைவிடப்பட்ட உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள்! - தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ்
லண்டன்: மழையால் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் விளையாடவிருந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் கைவிடப்பட்டன.
மற்றொரு போட்டியான தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இப்போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க வீரர்களாக ஹசிம் ஆம்லா - டி காக் இணை களமிறங்கியது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எவ்வித சிரமமுமின்றி எளிதாக எதிர்கொண்டது. ஆம்லா அரைசதம் கடந்தார்.
தென்னாப்பிக்கா அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.