தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

CWC19 : டாஸ் வென்ற நியூசி அணி பந்துவீச்சு; இலங்கை பேட்டிங்! - இலங்கை vs நியூசிலாந்து

கார்டிஃப்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

CWC19

By

Published : Jun 1, 2019, 2:50 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், இலங்கை அணியை பேட்டிங் ஆடப் பணித்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி ஆடவுள்ளதால், இந்த ஆட்டத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நியூசிலாந்து அணியில் டிம் சவுதி இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை அணி விவரம்:

திமுத் கருணரத்னே (கேப்டன்), குசால் பெரேரா, திரிமான்னே, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, லக்மல், உடானா, லசித் மலிங்கா, ஜீவன் மெண்டிஸ்

நியூசிலாந்து அணி விவரம்:

வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், கப்தில், ராஸ் டெய்லர், காலின் மன்ரோ, நீஷம், கிராண்ட்ஹோம், சாண்ட்னர், போல்ட், ஃபெர்குசன், ஹென்ரி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details