உலகக் கோப்பைத் தொடரின் பதிமூன்றாவது ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. நியூசிலாந்து அணி இதற்கு முன் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் போட்டியில் இலங்கை அணியையும், இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தையும் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கப்தில், லாதம், மன்ரோ, ராஸ் டெய்லர், வில்லியம்சன், கிராண்ட்ஹோம் என பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்தாலும் ரஷீத் கான், நபி ஆகியோரின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ளவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடி கொடுக்கும். பந்துவீச்சில் போல்ட், சாண்ட்னர், ஃபெர்குசன், ஹென்றி ஆகியோர் மிரட்டி வருகின்றனர். இன்றும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.