2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி தற்போது பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கான பேட்டிங் வரிசையில் 4ஆவது இடத்தில் லோகேஷ் ராகுல் இடம்பெற்றுள்ளார். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சார்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக களமிறங்காமல் இருந்த ஆம்லா இந்தப் போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் லுங்கி நிகிடிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி விவரம்: ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்தரா சாஹல், பும்ரா
தென்னாப்பிரிக்க அணி விவரம்: டிகாக், ஹாசிம் ஆம்லா, டுப்ளஸிஸ் (கேப்டன்), வேண்டர் டூஸன், டேவிட் மில்லர், டுமினி, பெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ககிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், ஷம்சி.