தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து! - மான்செஸ்டர்

மான்செஸ்டர்: உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

இந்தியா-நியுசிலாந்து

By

Published : Jul 10, 2019, 4:02 PM IST

Updated : Jul 10, 2019, 4:48 PM IST

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 46.1 ஓவர்களில் 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ராஸ் டெய்லர்

இந்நிலையில் இன்று தொடங்கிய மீதியிருக்கும் ஓவர்களுக்கு பேட்டிங்கை தொடர்ந்தது நியூசிலாந்து அணி. அப்போது சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லரை ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கால் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே லாதம் 10 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஹென்றி 1 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரை போல்ட் - சாண்ட்னர் இணை எதிர்கொண்டது. அந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது.

புவனேஷ்வர் குமார்

இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Last Updated : Jul 10, 2019, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details