ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் குழப்பம் ஏற்பட்டு, அது அணியை பாதித்துவருகிறது. தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சேஷாத் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கண்ணீர் மல்க காணொலி வெளியிட்டு அதில், 'உடல் தகுதியுடன் இருக்கும் என்னை ஏன் நீக்கினீர்கள்' என பேசியது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது.
அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக கேப்டன் ஆப்கானை நீக்கிவிட்டு குலாப்தீன் நைப் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் உலகக்கோப்பைத் போட்டிகளில் ஆப்கானை அணியில் சேர்க்காதது ரசிகர்களிடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.