2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியைப் பொறுத்தவரையில், விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், காயமடைந்த ஜேசன் ராய் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது ரசிகர்களால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.