தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஃபிளாட் டிராக் பிட்ச் குறித்து கவலை இல்லை - சாஹல் - Chahal

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், பயன்படுத்தப்படவுள்ள ஃபிளாட் டிராக் ஆடுகளத்தில் பந்துவீசுவதற்கு கவலைப்படவில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஃபிளாட் டிராக் பிட்ச் பத்திலாம் கவல இல்ல - சாஹல்

By

Published : May 25, 2019, 9:01 AM IST


கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கும், 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. தற்போது சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிலும் இங்கிலாந்தில் அதிகமான ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக ஃபிளாட் டிராக் ஆடுகளத்தை தயார் செய்துவருகிறார்கள்.

இதனால், பேட்ஸ்மேன்கள் மிக அசால்டாக ரன்களை அடித்துவருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் பயன்படத்தப்படவுள்ள ஃபிளாட் டிராக் ஆடுகளம் குறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல் கூறுகையில்,

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஃபிளாட் டிராக் ஆடுகளத்தில் பந்துவீசவதற்கு நான் கவலைப்படவே இல்லை. பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்கள் அதிகமாக ரன் விளாசும் ஃபிளாட் டிராக் பிட்ச்தான். அந்த மைதானத்தில் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறேன் என்பதை மறந்திவிடக் கூடாது.

ஒருவேளை ஃபிளாட் டிராக் ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச எனக்கு கஷ்டமாக இருந்தால், அதேதானே எதிரணியின் பவுலர்களுக்கும் இருக்கும். என் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் ரன் அடித்தாலும், நான் தொடர்ந்து பந்துகளை நல்ல உயரத்தில் சுழற்றிப் போட (ஃபிலைட் டர்ன்) வீச பயப்படமாட்டேன். ரஸல், வார்னர் போன்ற அதிரடி வீரர்களுக்கு பந்துவீசும் போது, அவர்களை அட்டாக்கிங் ஷாட் ஆட வைத்துதான் ஆட்டமிழக்க வைக்க வேண்டும். இவர்களது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் பந்துவீசுவேன் என்றார். இந்தத் தொடர் மூலம், இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details