தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாவது அரையிறுதி - இங்கிலாந்துக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி. - ஆஸ்திரேலியா அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

smith

By

Published : Jul 11, 2019, 6:53 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியபோது கேப்டன் ஆரோன் பிஞ்ச் 0, வார்னர் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - அலெக்ஸ் கேரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தபோது அலெக்ஸ் கேரி 46 ரன்னில் அடில் ரஷித் சுழலில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் இறுதிப் பந்தில் ஸ்டாஸ்னிஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஸ்மித் - அலெக்ஸ் கேரி

பின்னர் சிறிது நேரம் தாக்குப்பிடித்த மேக்ஸ்வெல் 22 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அதிரடி வீரர் ஸ்மித் 85 ரன்கள் (119 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்தநிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எட்டியது.

இங்கிலாந்து பந்துவீச்சீல் வோக்ஸ், அடில் ரஷித் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இங்கிலாந்து அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details