உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியின் எட்டாவது ஓவரில் கடைசி பந்தை ஜோஃப்ரா ஆர்ச்சர் விசும் போது, அந்தப் பந்து அலெக்ஸ் கேரியின் தாடையில் பட்டு ரத்தம் வழிய ஆரம்பித்தது. இதனையடுத்து உடனடியாக அலெக்ஸ் கேரிக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது.
ரத்தம் சொட்டச் சொட்ட விளையாடிய அலெக்ஸ் கேரி - Alex carey
பர்மிங்ஹாம்: உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தால் அலெக்ஸ் கேரிக்கு காயம் ஏற்பட்டது.
அலெக்ஸ் கேரி
மேலும், தாடையில் அடிப்பட்டதைப் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும், அணியின் வெற்றிக்காக ஆட வேண்டும் என்கிற அவரது முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது.