கிரிக்கெட் வாரிய முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வாரிய தேர்தல்கள் ஒருதலை பட்சமாக நடத்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ஐசிசியால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஐசிசி உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் மேல்முறையீடு செய்திருந்தது. நேற்று தூபாயில் கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த தடைநீக்கம் குறித்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் ஐசிசி ஜிம்பாப்வே அணி மீதான தடையை நீக்கி மீண்டும் ஐசிசி உறுப்பினராக நியமனம் செய்துள்ளது.
மேலும், இதே காரணத்திற்காக கடந்த 2016ஆம் ஆண்டு நேபாளம் அணி ஐசிசியின் உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது. தற்போது ஜிம்பாப்வே அணி மீதான தடையை நீக்கியதன் மூலமாக நேபாளம் அணி மீதான தடையையும் நீக்கி ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
தற்போது மீண்டும் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகள் ஐசிசி உறுப்பினர்களாக இணைந்ததால் இனி வரும் அனைத்து வகையான ஐசிசி தொடர்களிலும் இவ்விரு அணிகளும் பங்கேற்கும் என்பதினால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பல அணிகளுக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வேவுக்கே பேரதிர்ச்சி!