‘யார்க்கர் கான்’ என இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைப்படுபவர் சாஹிர் கான். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் பவுலர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அவரது 41ஆவது பிறந்தநாள் இன்று. இந்திய கிரிக்கெட் பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சாஹிர் கானுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா சொன்ன வாழ்த்து, சும்மா இருந்த சாஹிர் ரசிகர்களை சூடாக்கிவிட்டது.
#HBDZaheer - வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஹர்திக்! - சாஹிர் கான்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹிர் கானுக்கு வாழ்த்து சொல்லி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
Zaheer fan's scold hardik pandya for birthday wish
சாஹிர் கான் வீசும் பந்தை தான் பவுண்ட்ரிக்கு அனுப்புவது போன்ற க்ளிப்பை பதிவிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் ஹர்திக். அதில், பிறந்தநாள் வாழ்த்துகள் சாஹிர். நான் இந்த பந்தை அடித்து விரட்டியது போலவே நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன் என கலாய்த்திருக்கிறார்.
இதனைக் கண்ட சாஹிர் கான் ரசிகர்கள், உங்களை விட மூத்த வீரரை இப்படிதான் பேசுவீர்களா என ஹர்திக் பாண்டியாவுக்கு அறிவுரை வழங்குவதோடு, சிலர் வசைபாடவும் செய்கின்றனர்.
Last Updated : Oct 7, 2019, 11:13 PM IST