தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய-ஆப்கன் அணியை தேர்வு செய்த சஹால், ரஷீத்! - ஐபிஎல் 2020

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களான யஸ்வேந்திர சஹால் மற்றும் ரஷீத் கான் இருவரும் இணைந்து ஒருங்கிணைந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் அணியை தேர்வுசெய்துள்ளனர்.

Yuzvendra Chahal, Rashid Khan pick India-Afghanistan combined XI
Yuzvendra Chahal, Rashid Khan pick India-Afghanistan combined XI

By

Published : Jun 10, 2020, 8:00 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின், இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் பிசிசிஐ, ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் இந்திய அணியின் யஸ்வேந்திர சஹால் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் ஆகியோர் இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்து உரையாடினார்கள்.

அப்போது அவர்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் வீரர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த 11 வீரர்களை தேர்வுசெய்துள்ளனர்.

அந்த அணியில்ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரஹ்மத் ஷா, கே எல் ராகுல், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முஜிப் உர் ரஹ்மான்.

ABOUT THE AUTHOR

...view details