தமிழ்நாடு

tamil nadu

பும்ராவின் சாதனையை முறியடித்த சாஹல்

By

Published : Nov 11, 2019, 2:54 PM IST

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது பந்துவீ்ச்சாளர் என்ற பெருமையை சாஹல் பெற்றார்.

Yuzvendra Chahal

நாக்பூர்:சர்வதேச டி20 போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகளை இந்திய வீரர் பும்ராவின் சாதனையை சாஹல் முறியடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நாக்பூரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்திய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். மைதானத்தில் பனிப்பொழிவு இருந்ததால் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு செட் ஆகவில்லை. இதனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான சாஹலின் ஓவரை வங்கதேச வீரர்கள் பவுண்டரிகளாக வெளுத்துக்கட்டினர்.

சாஹல்

இருப்பினும், தனது கடைசி ஓவரில் வங்கதேச அணியின் கேப்டன் மஹமதுல்லாவை க்ளின் போல்ட் செய்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முன்னதாக பும்ரா 41 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில், சாஹல் தனது 34ஆவது போட்டியிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details