தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'யுவாராஜ் பங்கேற்றதால்தான் இது சாத்தியமானது’- ஷாஜி உல் முல்க்! - யுவராஜ் சிங் பங்கேற்ற அணியான மராத்தா அரேபியன் அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது

அபுதாபி: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், டி10 லீக்கில் கலந்து கொண்டதால்தான் டி10 லீக் இரட்டிப்பு வரவேற்பை பெற்றது என டி10 லீக் உரிமையாளர் ஷாஜி உல் முல்க் தெரிவித்துள்ளார்.

Abu Dhabi T10

By

Published : Nov 25, 2019, 12:37 PM IST

கிரிக்கெட் வரலாற்றின் அடுத்த பரிணாமமான 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் டி10 லீக் என பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த டி10 லீக்கின் மூன்றாவது சீசன் நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்ற அணியான மராத்தா அரேபியன் அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. இந்த விழாவில் பங்கேற்ற டி10 லீக் உரிமையாளர் ஷாஜி உல் முல்க் கூறுகையில்,

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோரின் பங்கேற்பு காரணமாகவே, இந்தாண்டு டி10 லீக் தொடரானது இரட்டிப்பு வரவேற்ப்பை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற யுவராஜ் சிங்
மேலும் இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வாட்சன், பொல்லார்ட் போன்ற வீரர்கள் இந்த தொடரில் தங்களது பங்களிப்பை சரியாக செய்து அணியின் வெற்றிக்காக பெரிதும் உழைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதன் பின் அவர் கனடா டி20 லீக், டி10 லீக் ஆகிய தொடர்களில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் நரேன் கார்த்திகேயன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details