ஐபிஎல் தொடருக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில், அனைத்து அணிகளும் போட்டிகளுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டனர்.இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டது. அதில், இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் வலைப்பயிற்சியை மேற்கொள்வதற்காக மெதுவாக நடந்து செல்கிறார்.
தன்னைத் தானே கலாய்த்து கொண்ட யுவராஜ் சிங்! - மும்பை இந்தியன்ஸ்
ஹைதராபாத்: ஐபிஎல் 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அவரை பற்றி பதிவிட்ட வீடியோவை அவரே கலாய்த்துள்ளார்.
இந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்துள்ள யுவராஜ், கொஞ்சம் வேகமாக நடந்து செல் சகோதரா என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் தன்னைத் தானே கலாய்த்துக்கொண்டுள்ளார்.பஞ்சாப், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக ஆடியுள்ள யுவராஜ் சிங் இதுவரை 128 ஐபிஎல் போட்டிகளில் 2 ஆயிரத்து 692 ரன்களை குவித்துள்ளார்.
வரும் ஐபிஎல் தொடருக்காக மும்மை அணி அவரை 1 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் வாங்கியது. கடந்த ஐபிஎல் சீசனில் சோபிக்காத யுவராஜ் இந்த முறை தனது ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.