தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’எது நிஜம், எது நிழல் எனத் தெரியவில்லை’... இளம் வீரர்களை சாடிய யுவராஜ் சிங்! - பும்ரா - யுவராஜ் நேர்காணல்

இளம் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஒரு மாதிரியாகவும், நேரில் அதற்கு எதிர்மறையாகவும் நடப்பதை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சாடியுள்ளார்.

yuvraj-takes-a-dig-at-budding-cricketers-says-they-become-something-else-on-social-media
yuvraj-takes-a-dig-at-budding-cricketers-says-they-become-something-else-on-social-media

By

Published : Apr 27, 2020, 11:57 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டாய ஓய்வில் உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது என தங்களது நேரத்தை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே ரசிகர்களுக்காகவும் நேரம் செலவிடுவது கிரிக்கெட் ரசிகர்களை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு வீரருடன் இன்னொரு வீரர் உரையாடுகையில், சில நாஸ்டாலஜியா சம்பவங்களை நினைவுப்படுத்தி வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. நேற்று மாலை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குடன் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார்.

அந்த உரையாடலின்போது சமூக வலைதளம் பற்றி பேச்சு சென்றது. அப்போது யுவராஜ் சிங் இளம் வீரர்களை கடுமையாகச் சாடினார்.

அதில், ''சமூக வலைதளங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள இளைஞர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்கள் அவர்களாகவே இல்லை. நான் இளம் வீரர்கள் பலரையும் சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, நேரில் பார்க்கும்போது இனிமையாக இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். என்ன விஷயமாக இருந்தாலும் நம்முடைய சொந்தக் கருத்து இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதிலிருந்து விலகக் கூடாது. அவ்வாறு இருந்தால், நம்முடைய மன உறுதியும் அதிகமாக முன்னேறும்'' என்றார்.

அதையடுத்து இந்திய அணி வீரர்களின் ஃபிட்னஸ் குறித்தும் உரையாடல் சென்றது. அதில், இந்திய வீரர்கள் மிகவும் அதிக ஃபிட்னஸுடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் காலத்தில் ஃபிட்னஸ் குறித்து பரவலாக பேச்சு இல்லை'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்...! நினைவுகூறும் யுவராஜ் சிங்!

ABOUT THE AUTHOR

...view details