இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த யுவராஜ் சிங், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதன்பின் ஐபிஎல், மற்ற டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டுவந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம், யுவராஜ் சிங்கை தொடர்புகொண்ட பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் புனீத் பாலி, யுவராஜ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடினால், அது இளைஞர்களுக்கு பெரும் அனுபவமாக இருக்கும் என்று யுவராஜ் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புனீத் பாலி கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யுவராஜ் சிங், ஏற்கனவே இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருப்பினும் யுவராஜ் சிங் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட பிசிசிஐ விதிகள் அனுமதிக்காது என்ற ரீதியில் தகவல் பரவின. இது குறித்து பிசிசிஐ சேர்ந்த ஒருவர் கூறுகையில், "யுவராஜ் சிங் ஒய்வுபெற்றவுடன் அவருக்கு குறிப்பிட்ட தொகை (One time benefit) வழங்கப்பட்டது.