இந்தாண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. இத்தொடரில் இங்கிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வுக் குழுவைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ' இந்தாண்டு இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் எனப் பல நாடுகளும் சொல்லி வந்தன. ஆனால், இந்திய தேர்வுக் குழு செய்த தவறினால் அது சாத்தியமில்லாமல் போனது. மேலும், இந்திய அணி வீரர்களின் தேர்வானது, என்னை மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது' எனக் கூறினார்.