கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் ஓய்வெடுத்து வருகின்றனர். இதன் நடுவே ஒவ்வொரு வீரரும் இன்ஸ்டாகிராம் மூலம் மற்ற வீரர்களோடு உரையாடி வருகின்றனர். இந்த உரையாடல்கள் ரசிகர்களுக்கு பல நாஸ்டால்ஜியா சம்பவங்களை நினைவுபடுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, அஸ்வின் இருவரும் நேற்று இன்ஸ்டாகிராமில் உரையாடினர். அதில் ரோஹித் ஷர்மா தனது முதல் இரட்டை சதத்தைப் பற்றி பேசினார். அப்போது அணி வீரர்கள் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் கூறினார்.
2013ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். அதுகுறித்து அவர் பேசுகையில், '' முதல் இரட்டை சதம் விளாசிவிட்டு நான் ட்ரெஸ்ஸிங் ரூம்மிற்குள் நுழைந்தபோது, ஒருவர் இன்னும் ஒரு ஓவர் கிடைத்திருந்தால் சேவாக்கின் தனிநபர் சாதனையை முறியடித்திருக்கலாம் என்றார்.