உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் பணிக்காக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் சயித் அப்ரிடி தனது அறக்கட்டளை சார்பாக உதவிசெய்துவருகிறார். இந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார்.