வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், களத்திற்கு வெளியே மிகவும் ஜாலியான மனிதர். தோல்வியையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எதிரணியின் வெற்றியை அவர்களோடு சேர்ந்துகொண்டாடும் அளவிற்கு எவ்வித ஈகோவும் இல்லாதவர்.
நேற்று கிறிஸ் கெய்ல் இருக்கும் காணொலி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பதிவிட்டார். அந்தக் காணொலியில், என்னுள் நம்பிக்கை உள்ளது. அதற்காக என்னை நான் தயார்படுத்துகிறேன் என்று பொருள்படும் 'கான்ஃபிடன்ஸ் மேரா! கபார் பனேஹி தேரி!' என்ற இந்தி வசனத்தை கெய்ல் ஆக்ரோஷமாகப் பேச முயற்சித்துள்ளார். அந்தக் காணொலியில் கெய்லுக்குப் பின்னால் யுவராஜ் நின்றிருப்பார்.