தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உள்ளூர் போட்டினா அவ்வளவு இளக்காரமா? பிசிசிஐ விதிமுறை குறித்து யுவராஜ் சிங் கேள்வி! - விஜய் ஹசாரே தொடர் 2019

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து யுவராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Yuvra

By

Published : Oct 22, 2019, 6:42 PM IST

இந்தியாவில் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கிய தொடராக கருதப்படுகிறது. இந்த சீசனுக்கான நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் மோதின. இதில், தமிழ்நாடு அணி 39 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டது.

இதனால், விஜேடி முறைப்படி பஞ்சாப் அணிக்கு 39 ஓவர்களில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 12.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டு தொடர்ந்து பெய்ததால் இப்போட்டியில் முடிவு ஏற்படவில்லை.

இதனால், குரூப் பிரிவில் பெற்ற வெற்றிகள் படி தமிழ்நாடு அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு அணி குரூப் பிரிவில் ஒன்பது வெற்றிகளை பதிவு செய்தது. மறுமுனையில், பஞ்சாப் அணி ஐந்து வெற்றிகளை மட்டுமே எடுத்தது.

இதைத்தொடர்ந்து, பிசிசிஐயின் இந்த விதிமுறைக் குறித்து முன்னாள் இந்திய வீரரும், பஞ்சாப் வீரருமான யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். அதில், "விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாபிற்கு மீண்டும் ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பஞ்சாப் அணியின் பயணம் மீண்டும் முடிவுக்கு வந்துவிட்டது. புள்ளிகளில் அடிப்படையில், நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதுபோன்று சூழ்நிலையில், போட்டியை ஏன் மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கக்கூடாது (ரிசர்வ் டே). உள்ளூர் போட்டி என்பதால் ரிசர்வ் டே தேவையில்லை என பிசிசிஐ நினைக்கிறதா" என பதிவிட்டிருந்தார்.

பொதுவாக, சர்வதேச கிரிக்கெட்டில் அரையிறுதி, இறுதிப் போட்டியின்போது மழை குறுக்கிட்டால் போட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்படும் (ரிசர்வ் டே). உலகக்கோப்பை தொடரில் கூட இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரிசர்வ் டேவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங்கைப் போலவே, பஞ்சாப் அணியின் கேப்டன் மந்தீப் சிங்கும் பிசிசிஐயின் இந்த விதிமுறை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் பின்பற்றப்படும் ரிசர்வ் டே விதிமுறைகள், இனி உள்ளூர் தொடரலும் பின்பற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details