இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். இவர் இந்தியாவிற்காக 58 டி20 போட்டிகளில் விளையாடி 1,177 ரன்களை குவித்துள்ளார். அதேபோல 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,750 ரன்களை குவித்தார். 2007இல் சர்வதேச டி20 தொடரில் அதிவேகமாக 12 பந்துகளில் அரைசதம் அடித்த இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
உலகக் கிரிக்கெட்டில் மீண்டும் யுவராஜ்...! - global t20
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கனடாவில் நடைபெறும் குலோபல் டி20 தொடரில் விளையாடவுள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் கனடாவில் நடைபெற்றுவரும் குலோபல் டி20 தொடரில் டொரண்டோ அணிக்காக விளையாட யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை குலோபல் டி20 அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுவரை இந்திய வீரர்களை ஜபிஎல் தவிர மற்ற நாட்டு டி20 தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி அளிப்பதில்லை. அதனால் யுவராஜ் சிங் குலோபல் டி20 தொடரில் பங்கேற்பாரா? என்று அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என இரண்டிலும ஓய்வை அறிவித்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.