முன்பு ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது.
இறுதியாக, 2013இல் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள், டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அதன்பின், இந்த இரண்டு அணிகளும் ஆசியக்கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து வருகின்றனர். இதனால், அரசியல் காரணங்களை விடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலைியல் இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், ' பாகிஸ்தானுக்கு எதிராக 2004, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் விளையாடிய நினைவு எனக்கு இருக்கிறது. ஆனால், தற்போதைய காலங்களில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடர்கள் நடைபெறாமல் இருக்கிறது. நமக்கு கிரிக்கெட் பிடிக்கிறது என்பதற்காகத்தான், இந்த விளையாட்டை விளையாடுகிறோம்.