அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நவம்பர் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது. இரண்டு பிரிவுகளில் மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இதில் பல முன்னாள் நட்சத்திர வீரர்களும், அதிரடி வீரர்களும் களமிறங்குகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங்கும் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக களமிறங்கவுள்ளார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் அதன்பின் கனடா குளோபல் டி20 தொடரில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து டி10 தொடரில் விளையாடுவதற்காக மராத்தா அரபியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.