குளோபல் டி20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான டொரோண்டோ நேசனல்ஸ் அணியும், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மான்டீரியல் டைகர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற யுவராஜ் சிங் மான்டீரியல் டைகர்ஸ் அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். மான்டீரியல் டைகர்ஸ் அணியின் வீரர்கள் யாருமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது.
பெய்லியை வீழ்த்திய யுவராஜ் சிங்! - global t20
ஆன்டாரியா: குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான டொரோண்டோ நேசனல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
அந்த அணியின் வீரர் கைல் கோயட்சர் மட்டும் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மான்டீரியல் டைகர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆட வந்த டொரோண்டோ நேசனல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தாமஸ் 6 ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரர் சிராக் சுரி அதிரடியாக ஆடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹென்ட்ரிக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கிளாசன் அதிரடியாக ஆடினாலும், 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் யுவராஜ் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் பெவிலியனுக்கு திரும்பினார். பொறுப்புடன் ஆடிய கிரிஸ் கீரின் டொரோண்டோ நேசனல்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். டொரோண்டோ நேசனல்ஸ் அணி இறுதியாக 17.3 ஓவர்களிலே இலக்கை எட்டிப்பிடித்து எளிதாக வென்றது.