இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக வலம்வந்த யுவராஜ் சிங், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார். அவர் எத்தனை போட்டிகளில் விளையாடியிருந்தாலும் அவரது பெயரைக் கேட்டதும் இந்திய ரசிர்கள் மட்டுமல்ல உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அந்த ஒரு போட்டிதான் முதலில் நினைவில் வந்துபோகும்.
அப்போ என்கிட்ட மைக் இருந்துச்சு... என் ஜூனியர் கிட்ட பேட் இருந்துச்சு - ரவி சாஸ்திரி - ரவி சாஸ்திரி
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங்கின் அடித்த ஆறு சிக்சர்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
ஆம் அந்தப் போட்டிதான். தென் ஆப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசி அனைவரையும் கலங்கடித்தார். நம் அனைவருக்கும் அந்தப் போட்டி நினைவிருக்கிறது என்றால் அதற்கு மற்றுமொரு காரணமும் கூட உள்ளது. ஏனெனில், யுவராஜ் இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியபோது, அதை தன் காந்தக் குரலால் கமெண்டரியில் பிரதிபலித்தவர் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர்.
இந்நிலையில் யுவராஜ் சிங் அந்தச் சாதனையை நிகழ்த்திய தினம் செப். 19தான் என்பதால் அதனை ஐசிசியும் நினைவுகூர்ந்தது. அதை ரவி சாஸ்திரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்திருந்தார். அந்தப் பதிவில் அவர், 'அன்றைய தினம் எனது கையில் மைக் இருந்தது. எனது ஜூனியர் கையில் பேட் இருந்தது' எனப் பதிவிட்டுள்ளார்.