தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஓய்வுக்கு பிறகும் களமிறங்கும் யூசுப் பதான்! - திலகரத்ன தில்சான்

இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த யூசுப் பதான் பங்கேற்கவுள்ளார்.

Yusuf Pathan, Sanath Jayasuriya to feature in Road Safety World Series
Yusuf Pathan, Sanath Jayasuriya to feature in Road Safety World Series

By

Published : Feb 27, 2021, 5:02 PM IST

கிரிக்கெட் வீரர்களை வைத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சாலைகளில் நடத்தை விதிகள் குறித்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (பிப்.26) சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான், வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார் ஆகியோர் அறிவித்தனர். இதற்கிடையே மார்ச் 5ஆம் தேதி தொடங்கவுள்ள சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடருக்கான இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் யூசுப் பதான் மற்றும் வினய் குமார் ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் திலகரத்ன தில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியில், ஜெயசூர்யா, உபுல் தரங்கா, ரஸ்ஸல் அர்னால்ட் ஆகியொரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதில் உபுல் தரங்கா சில தினங்களுக்கு முன் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, வங்கதேச லெஜண்ட்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. இப்போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:மகளிர் உள்ளூர் கிரிக்கெட் தொடர் மார்ச் 11 முதல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details