தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடவேண்டும்' - ஜோ பர்ன்ஸ் - விளையாட்டுச் செய்திகள்

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடவேண்டும் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

you-want-to-play-and-do-well-against-india-joe-burns
you-want-to-play-and-do-well-against-india-joe-burns

By

Published : May 8, 2020, 7:42 PM IST

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸால் இதுவரை 2.7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் பேசுகையில், ''கரோனா வைரஸால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதிச்சுமையில் சிக்கியுள்ளது.

2020-21ஆம் ஆண்டுகளுக்கான செஃபீல்டு ஷீல்டு தொடரையும் ரத்து செய்வதற்கான பேச்சுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை உள்ளூர் வீரர்களைத் தயார்படுத்துவதற்கு சிறந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இம்முறை உள்ளூர் வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றாகத் தெரியும். அதுபற்றி கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜோ பர்ன்ஸ்

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடவேண்டும். இந்திய கிரிக்கெட் அணி எப்போதும் உலகத்தரம் வாய்ந்தது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையே போட்டிகள் நடந்தால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், வீரர்களுக்குமே சிறந்த போட்டியாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க:பார்த்தீவை முகத்தில் குத்துவேன் என மிரட்டிய ஹெய்டன்...!

ABOUT THE AUTHOR

...view details