தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘குடியுரிமை சட்டத்தில் நான் தலையிட விரும்பவில்லை’ - கோலி

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனக்கு போதிய புரிதல் இல்லாததாதல் அவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Virat Kohli on CAA
Virat Kohli on CAA

By

Published : Jan 4, 2020, 6:25 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் தொடங்கவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் நேற்று கவுகாத்தி வந்தடைந்தனர். நாளை போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

கோலி

அப்போது, சிஏஏ குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ‘கவுகாத்தி நகரம் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதால், இங்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முழு விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். எனக்கு இச்சட்டம் குறித்து போதிய புரிதல் இல்லாத நிலையில், நான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை’ என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:குடியுரிமை திருத்தச் சட்டம் பாஜக எடுத்த மோசமான முடிவு - தேவே கவுடா

ABOUT THE AUTHOR

...view details