தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்' - ஸ்டீவ் ஸ்மித்

சிறுவயது முதலே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மிகவும் பிடிக்கும் என்றும், இந்தியாவுக்கு எதிரான பக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாட காத்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

You get shivers down your spine playing on Boxing Day: Steve Smith
You get shivers down your spine playing on Boxing Day: Steve Smith

By

Published : Dec 23, 2020, 9:02 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டிசம்பர் 26ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், "மெல்போர்ன் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் எனக்கு பிடித்த ஒன்று. அதிலும் பாக்ஸிங் டே போட்டியை அங்கு விளையாடவுள்ளது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்னரும் எனது டெஸ்ட் இன்னிங்ஸை மெல்போர்னில் விளையாடியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

'பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகாக காத்திருக்கிறேன்'

அங்கு கூடும் பார்வையாளர்களின் ஆரவாரத்தில் விளையாடுவது எனக்கு எப்போது உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும் எனது சிறுவயது முதலே நான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளை விரும்பி பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருக்கும் போது கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தவுடன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளை குடும்பத்துடன் பார்ப்போம். அதனால் தற்போது இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கான காரணத்தை விளக்கும் சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details