இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் ஒரு பகுதியாக வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷத்மன் இஸ்லாம், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஹா இந்த கேட்சை பிடித்ததின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்காக 100 (89 கேட்சுகள், 11 ஸ்டம்பிங்கள்) விக்கெட்டுகளை கீப்பிங் முறையில் செய்த, ஆறாவது இந்தியர் என்ற சாதனையைப் பெற்றார்.