கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு உலக நாடுகள், வெளிநாடுகளுக்கு சென்று வரும் தம் நாட்டு மக்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் தனிமைப்படுத்தப்படும் தருணத்தில் தனது அணியிலுள்ள ஒருவருடன் நேரம் செலவிடுவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் விளையாட்டு செய்திதளத்திற்கு ஸ்டெயின் அளித்த பேட்டியில், 'தனிமைப்படுத்தப்படும் தருணத்தில் நான் குவிண்டன் டி காக் போன்ற ஒருவருடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன். ஏனெனில் உலகில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவர். நீங்கள் அவரது ஓட்டல் அறைக்குள் நுழைந்தால் அவர் மீன் பிடிப்பதற்கான தூண்டில்களை உருவாக்குவார், அல்லது மீன் பிடிப்பது போன்ற காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.