தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பை சாம்பியன்ஸ் 'இங்கிலாந்து அணி' 85 ரன்களுக்கு ஆல் அவுட் - டிம் முர்டாஹ்

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்

By

Published : Jul 24, 2019, 5:57 PM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றிபெற்று சாதனைப் படைத்தது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்த போட்டியின் மூலம், இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜேசன் ராய் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் விளையாட வந்த இங்கிலாந்து அணி, கத்துக்குட்டியான அயர்லாந்து அணியிடம் இமாலய இலக்கை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ அனைத்தும் தலைகீழ்.

ஜேசன் ராய் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் டிம் முர்டாஹ்

எந்த மைதானத்தில் கோப்பையை தூக்கினார்களோ அதே மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள், அயர்லாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு போட்டி போட்டு திரும்பினர். இறுதியில் இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இங்கிலாந்து ஹிரோக்களான ஜானி பெயர்ஸ்டோவ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இப்போட்டியில் டக் அவுட் ஆகினர்.

இதுமட்டுமல்லாது, இங்கிலாந்து அணியில் ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்னில் நடையைக் கட்டினர். அயர்லாந்து அணி தரப்பில் டிம் முர்டாஹ் 5 விக்கெட்டுகளையும், மார்க் அடயர் 3, பாயிட் ரான்கின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 36ஆவது முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதுமட்டுமின்றி இது இங்கிலாந்து அணி எடுத்த 25ஆவது குறைந்த ஸ்கோர் ஆகும். அயர்லாந்து அணியிடம் 85 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணியின் ஆட்டத்திறனைக் கண்டு நெட்டிசன்கள் இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details