தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அணியிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ் வுமன் ஸ்மிருதி மந்தனா! - Mandhana suffered a fracture

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா பயிற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

World number 1 Mandhana

By

Published : Oct 8, 2019, 9:05 PM IST

உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ் வுமனும், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும் வலம் வருபவர் ஸ்மிருதி மந்தனா. இவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனது வலது காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. ஆனால் மந்தனா காயம் காரணமாக அணியிலிருந்து விலகியது, இந்திய மகளிர் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மந்தனாவிற்குப் பதிலாக இளம் ஆல் ரவுண்டர் வீராங்கனையான பூஜா வஸ்திரகர், ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனாவின் காயம் பற்றி இன்னும் முழுமையாக தெரியாததால், தென் ஆப்பிரிக்கத் தொடர் முடிந்தவுடன் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் - மகளின் குறும்பை குறிப்பிட்ட தோனி

ABOUT THE AUTHOR

...view details