தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘அந்த நாளை மறக்கவேமாட்டேன்’ - கப்தில்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை தன்வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.

அந்த நாளை மறக்கமாட்டேன் - கப்தில்

By

Published : Jul 23, 2019, 6:59 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடிவடைந்துவிட்டது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஒருபக்கம் இருந்தாலும், கோப்பைக்கு அருகில் வந்து வெற்றிபெற முடியாமல் போனதே என்ற வருத்தத்தில் நியூசிலாந்து வீரர்கள் உள்ளனர்.

குறிப்பாக, நியூசிலாந்து அணி வெற்றிபெறாமல் போனதற்கு அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மார்டின் கப்திலே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும், இறுதிப் போட்டி முடிந்தபோது அவர் இருந்த மனநிலை நினைத்து ஒரு சில ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்நிலையில், இது குறித்து நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் கூறுகையில், "உலகக்கோப்பை ஃபைனல் போட்டி முடிந்து ஒருவார காலம் ஆகிவிட்டது என்பதை நம்புவதற்கு சற்று கடினமாகதான் உள்ளது. என் கிரிக்கெட் வாழ்வில் நிகழ்ந்த மிகச் சிறந்த மற்றும் மோசமான நாள் என நினைக்கிறேன். அந்த போட்டிக் குறித்து ஏராளமான உணர்ச்சிகள் இருந்தாலும், நியூசிலாந்து அணியை பிரதிநிதிப்படுத்தி சிறந்த வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியது எனக்கு பெருமையாக உள்ளது. எனக்காவும், அணிக்காகவும் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரன் அவுட் ஆன சோகத்தில் கப்தில்

உலகக்கோப்பை ஃபைனல் போட்டியின் போது அதிர்ஷ்டம் கப்திலுக்கும் நியூசிலாந்து அணி பக்கமும் இல்லை. குறிப்பாக, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டபோது, பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார்.

அப்போது, கப்தில் ஸ்டெம்ப்ஸை நோக்கி வீசிய பந்து, ஸ்டோக்ஸின் பேட் மீது எதிர்பாரவிதமாக பட்டு பவுண்ட்ரிக்கு சென்றது. இதனால், அம்பயர் குமார் தர்மசேனா இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்களை வழங்கினார்.

அதேபோல், சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கப்தில் இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியும், சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால், பவுண்ட்ரிகள் கணக்கில் ஐசிசி இங்கிலாந்து அணி வெற்றியாளர்கள் என அறிவித்தது. ஐசிசியின் இந்த விதிக்கும், குமார் தர்மசேனா ஓவர் த்ரோவிற்கு தந்த ஆறு ரன்கள் குறித்தும் இணையதளத்தில் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details