தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பின்ச் தலைமையில் ஆஸி. உலகக் கோப்பையை வெல்லும்: பாண்டிங் - ரிக்கி பாண்டிங்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரான் பின்ச் செயல்பட வேண்டும், என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பின்ச்

By

Published : Mar 15, 2019, 8:31 PM IST

இது குறித்து அவர் கூறுகையில்,

'சமீபகாலமாக ஆஸ்திரேலிய அணிக்கு மற்ற வீரர்களை காட்டிலும் ஆரான் பின்ச் நல்ல பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளார். ஆனால் தற்போது அவர் ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார்.

பேட்டிங்கில் சொதப்பினாலும், அது அவரது கேப்டன்ஷிப்பை மட்டுமின்றி அணியில் உள்ள வீரர்களின் ஆட்டத்தையும் பாதிக்காதது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நான் பார்த்தவரைக்கும், கேப்டன்ஷிப்பில் அவர் மிகவும் ஷார்ப்பாக செயல்படுகிறார். அணியின் வெற்றிக்கு அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சிறப்பாக உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இன்னும் நல்ல நல்ல வீரர்கள் இடம்பிடிக்க உள்ளனர். இதனால், என்னை பொறுத்தவரையில் உலகக் கோப்பை தொடரில் அவர்தான் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வேண்டும். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும்' என தெரிவித்தார்.

மேலும் பின்சின் கேப்டன்ஷிப்பை குறித்து அவர் கூறுகையில், நீங்கள் மிகவும் மோசமான பார்மில் இருந்தால், அது வீரராக உங்களக்கு பெரிய பாதிப்பை ஏற்பத்தும். ஆனால், நான் பார்த்த தலைசிறந்த கேப்டன்களில் ஒரு சிலர், சிறப்பாக விளையாடினாலும் உச்ச நிலைக்கு செல்லவும் மாட்டார்கள், அதே சமயம் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும், சோகத்தில் முழ்கவும் மாட்டார்கள் என்றார்.

10 வருடங்களுக்கு பிறகு, ஆரான் பின்ச் இன் தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்று அசத்தியது.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் பெற்ற தண்டனையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ளனர்.

இதனால், நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவாரா அல்லது ஆரான் பின்ச் செயல்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details