தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புதுமுக வீராங்கனையுடன் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி!

பிப்ரவரி 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Jan 12, 2020, 3:49 PM IST

womens-world-t20-rookie-batswoman-richa-only-new-face-in-indias-t20-world-cup-squad
womens-world-t20-rookie-batswoman-richa-only-new-face-in-indias-t20-world-cup-squad

மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தாய்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய மகளிர் அணிக் குழு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த புதுமுக வீராங்கனை ரிச்சா கோஷ் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்

சமீபத்தில் நடைபெற்ற சாலேஞ்சர் டிராபி தொடரில் ரிச்சா கோஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரை தேர்வுச் செய்தோம் என இந்திய மகளிர் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஹேமலதா காலா தெரிவித்தார்.

ரிச்சா கோஷ்

மேலும், 2017 உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கு பின் இந்திய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக கடந்த ஓராண்டுகளில் இந்திய அணிக்காக அறிமுகமான ஐந்து அல்லது ஆறு வீரர்கள் தற்போது சிறந்த வீராங்கனைகளாக வலம்வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. அதில், கூடுதலாக நுஸ்வத் பர்வீன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தத் டி20 தொடர் வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, அணியின் வீராங்கனைகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும், புதுமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் அறிய இந்த முத்தரப்பு தொடர் சற்று முக்கியம் வாய்ந்த தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடிய அனுபவம் உலகக் கோப்பை தொடரில் தனக்கு கை கொடுக்கும் என இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.

ஷஃபாலி வர்மா

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி:ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாத், ஷிகா பாண்டே, பூஜா வஸ்தரக்கர், அருந்ததி ரெட்டி

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸில் 2018இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இங்கிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details