ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அணிகளுக்கு இடையேயான கிவிபுக்கா மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 18ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்கா அணியான ரிவாண்டன் அணியும், மேற்கு ஆப்பிரிக்க அணியான மாலி அணியும் மோதின.
டி20 கிரிக்கெட்: 6 ரன்களில் ஆல்-அவுட்டான அணி! - bowled
டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை ஆப்பிரிக்க நாட்டின் மாலி மகளிர் அணி படைத்துள்ளது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மாலி அணி 9 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீராங்கனை எடுத்த 1 ரன்னைத் தவிர மற்ற 5 ரன்களும் உதிரிகளாக கிடைத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரிவாண்டா அணி 4 பந்துகளில் வெற்றி பெற்றது.
மாலி அணி 6 ரன்களில் ஆட்டமிழந்ததே டி20 போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிராக சீன மகளிர் அணி 14 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.