ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி - ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங், ”நாங்கள் இத்தொடரின் இறுதிப்போட்டி வரை வருவோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஏனேனில் இத்தொடரின் முதல் ஆட்டத்திலேயே நாங்கள் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தோம். பின் எங்கள் அணி வீராங்கனைகள் மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது இறுதிப் போட்டிவரை அழைத்துவந்துள்ளனர்.