தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை: மழையால் ரத்து செய்யப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!

பிரிஸ்பேன்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

womens-t20-world-cup-warm-up-match-between-india-and-pakistan-abandoned-due-to-wet-outfield
womens-t20-world-cup-warm-up-match-between-india-and-pakistan-abandoned-due-to-wet-outfield

By

Published : Feb 16, 2020, 11:42 PM IST

மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் வரும் பிப்.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருந்தது.

ரத்து செய்யப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

ஆனால் இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே கடும் மழை பெய்ததால், ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 18ஆம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளவுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மேலும் மழையின் காரணமாக ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் - தாய்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஈடிவி பாரத்திற்கு இந்தியாவின் உசைன் போல்ட் பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details