ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி நேற்று அடிலெயிட்டில் உள்ள கரேன் ரோல்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், தென் ஆப்பிரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இதனிடையே இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீராங்கனை தோலி ட்ரையன் அடித்த பந்தை, லாங் ஆஃப் திசையில் நின்றுகொண்டிருந்த இலங்கை வீராங்கனை அச்சினி குலசூர்யா பிடிக்க முயன்றார். ஆனால், பந்தை அவரது தலையில் பலமாக தாக்கியதால் மைதானத்தில் சுருண்டு வீழ்ந்த அவர், ஆம்புலன்சின் உதவியோடு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.