தமிழ்நாடு

tamil nadu

கப் அடிக்கலனா என்னா... நீங்க தடையைத் தாண்டி விளையாடுனதே பெருசுதான் - கம்பீர்

By

Published : Mar 9, 2020, 1:34 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணியின் முயற்சியை, முன்னாள் வீரர் கம்பீர், பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Indian women team, கம்பீர், கங்குலி, Ganguly, Bumrah, Gambhir
Indian women team, கம்பீர், கங்குலி, Ganguly, Bumrah, Gambhir

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் நேற்றுடன் நிறைவுபெற்றது. இதில் நேற்று மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

இருப்பினும், இந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அதன்பின் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றது.

இதனால் இம்முறை இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்தது. மேலும், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் ஆட்டமும் பெரிதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், நேற்றையப் போட்டியில் இந்திய அணி சற்று தடுமாறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும் இந்திய அணியின் முயற்சியை பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டியுள்ளனர்.

அந்த வகையில், பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி தனது ட்விட்டர் பதிவில், இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டு முறை உலகக்கோப்பை பைனலுக்குச் சென்றும் தோல்வியடைந்துள்ளோம். எனினும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். ஒருநாள் கோப்பையை வெல்வோம் என்று பதிவிட்டிருந்தார்.

கங்குலியின் ட்வீட்

இதே போன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்கள். கோப்பைகள் வரலாம், போகலம். ஆனால், இன்று சமூகத் தடைகளை உடைத்து தைரியத்தோடு விளையாடிய ஒவ்வொரு இந்திய பெண்களுக்கும் இது வெற்றிதான் என்று பதிவிட்டிருந்தார்.

கம்பீரின் ட்வீட்

இந்திய பந்துவீச்சாளர் பும்ரா, இந்தத் தொடர் முழுவதும் உங்களின் விளையாட்டைப் பார்ப்பது அருமையாக இருந்தது. நீங்கள் பல அருமையான தருணங்களை அளித்தீர்கள். உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details