தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிங்கப் பெண்களுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பிரத்யேக வாழ்த்து! - Indian women cricket ream

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றபெற வேண்டுமென இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் ஈடிவி பாரத் ஊடகம் வாயிலாக தங்களது பிரத்யேக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Women's T20 WC final: Kuldeep Yadav to Sushil Kumar, Sportsfratinity extended wishes to Indian eves
Women's T20 WC final: Kuldeep Yadav to Sushil Kumar, Sportsfratinity extended wishes to Indian eves

By

Published : Mar 8, 2020, 1:08 PM IST

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி மெல்போர்னில் தற்போது நடைபெற்றுவருகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் இவ்விரு அணிகளுக்கும் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோன்று இந்த தொடரில் முதன்முறையாக இறுதிச் சுற்றில் விளையாடிவரும் இந்திய அணிக்கு, இந்திய விளையாட்டு நட்சத்திரங்களான குல்தீப் யாதவ், அமித் மிஸ்ரா (கிரிக்கெட் வீரர்), புலேலா கோபிசந்த் (இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர்), சுஷில் குமார் (மல்யுத்த வீரர்) ஆகியோர், நமது ஈடிவி பாரத் ஊடகம் வாயிலாக தங்களது பிரத்யேக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் முக்கிய பிரமுகர்கள்.

அந்த வாழ்த்து குறிப்பில், "நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணிக்கு அனைவரும் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும். அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருகின்றனர். மகளிர் தினமான இன்று இந்திய அணி வெற்றிபெற வாழத்துகள்" என குறிப்பிட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. கடந்த 1983இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடரிலும், 2007இல் டி20 உலகக்கோப்பை தொடரிலும், இந்திய அணி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாம்பியன் பட்டங்களை வென்றது.

அதே போல், ஒரு மேஜிக்கை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் நிகழ்த்துமா? என்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், கனவாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி; இந்திய அணிக்கு ரசிகர்கள் சிறப்பு வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details