தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அதிகம் பார்வையாளர்கள் கண்ட தொடராக மாறிய மகளிர் டி20 உலகக்கோப்பை

கடந்த மாதம் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பைப் போட்டி, இதுவரை நடைபெற்ற மகளிர் போட்டிகளிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்டதாக இருந்தது என விளையாட்டு ஒளிபரப்பு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

Women's T20 WC breaks T20 viewership record in women's cricket
Women's T20 WC breaks T20 viewership record in women's cricket

By

Published : Mar 24, 2020, 1:35 PM IST

பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தப் போட்டியை 86 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நேரில் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடரை நேரலையில் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றிருந்தது. இந்தியா-ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தை தொலைக்காட்சி வாயிலாக சுமார் ஒன்பது மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

இதன்மூலம் அதிகபட்ச பார்வையாளர்கள் நேரலையில் கண்டுகளித்த முதல் போட்டி என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியை 1.8 மில்லியன் பார்வையாளர்கள் நேரலையில் கண்டுகளித்ததே மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க:கோவிட்-19: பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஃபிஃபா!

ABOUT THE AUTHOR

...view details