தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி - கிரிக்கெட் செய்திகள்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

womens-1st-t20-india-vs-south-africa
womens-1st-t20-india-vs-south-africa

By

Published : Mar 21, 2021, 7:38 AM IST

Updated : Mar 21, 2021, 2:37 PM IST

லக்னோ: இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டி20 போட்டி அடல் பிகாரி வாஜ்பாய் எகானா மைதானத்தில் நேற்று (மார்ச்.20) நடைபெற்றது.

இதில், முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஹர்லின் தியோல் 52 ரன்களும், ரோட்ரிக்ஸ் 30 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே இந்தியா அணி அடித்தது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளும், அன்னெக் போஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியின் அன்னெக் போஷ்-சுனே லூஸ் இணை, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். சுனே லூஸ் 43 ரன்னில் வெளியேறினார். மறுபுறம் இறுதிவரை அன்னெக் போஷ் களத்தில் நின்று, தன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் தியோல், அருந்ததி ராய் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:ரோஹித், கோலியின் அதிரடி அரை சதத்தால் இந்தியா 225 ரன்கள் குவிப்பு!

Last Updated : Mar 21, 2021, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details