தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கறுப்பாக இருப்பதால் நானும் இனவெறியால் காயப்பட்டுள்ளேன்- கிறிஸ் கெயில் - இனவெறி குறித்து கிறிஸ் கெயில்

இனவெறியால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் ‌கெயில் குரல் கொடுத்துள்ளார்.

Chris Gayle
Chris Gayle

By

Published : Jun 2, 2020, 2:30 AM IST

''என்னால் சுவாசிக்க முடியவில்லை ப்ளீஸ், என்னைக் கொன்று விடாதீர்கள்'' அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் கடைக்கு வந்த ஒருவரின் கடைசி வார்த்தைகள் இவை.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி அமெரிக்க காவல்துறையினர் கொலை செய்தனர்.

George flowyd

இதனால் அமெரிக்கா முழுவதும் ''நோ ஜஸ்டிஸ், நோ பீஸ்'' என்ற முழக்கங்கள் எழுந்துள்ளது. ஜார்ஜுக்கு நீதி கேட்டு நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இனவெறியால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதுக்கு எதிராக விளையாட்டு வீரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் ‌கெயில் குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்,"மற்றவர்களைப் போலவே கறுப்பினவர்களின் வாழ்க்கையும், உயிர்களும் முக்கியம். அவர்களை முட்டாள்கள் என்று அழைப்பதை நிறுத்துங்கள். எங்கள் சொந்த கறுப்பின மக்களும் கூட, புத்திசாலித்தனமான மக்கள் தான்.

நான் உலகெங்கும் பயணம் செய்துள்ளேன். நான் கருப்பினத்தவனாக இருப்பதால் இனவெறியால் காயப்பட்டு உள்ளேன் என்பதை நம்புங்கள். அந்த அனுபவங்கள் குறித்து பேச வேண்டுமென்றால் பட்டியல் நீளும்.

இனவெறி என்பது கால்பந்தில் மட்டுமல்ல, அது கிரிக்கெட்டிலும் கூட நடக்கிறது.ஒரு கறுப்பின மனிதனாக அணிகளுக்குள்ளேயே நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நிறம் வலிமையானது. என் நிறத்திற்காக நான் பெருமை கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details